தூய்மைப்பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள்


தூய்மைப்பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள்
x

தூய்மைப்பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள்

திருப்பூர்

திருப்பூா்

காந்திஜெயந்தியையொட்டி திருப்பூர் ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே, திருப்பூர் ரெயில் நிலையம் மற்றும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அலகு-2 ஆகியவை இணைந்து நடத்தும் ஒருநாள் ஒரு மணிநேரம் தூய்மைக்கான விழிப்புணர்வு, கலைநிகழ்ச்சிகள் மற்றும் தூய்மைப்பணி ஆகியவை நேற்று நடைபெற்றது. இதில் துணை மேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் மாணவ செயலர்கள் ஆகியோர் தலைமை தாங்கினர். நாட்டு நலப்பணி திட்டம் ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ரெயில்வே உதவி வணிக மேலாளர் ஷியாமல் குமார் கோஷ், சேலம் கோட்ட பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், துணை மேலாளர் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தனர்.

இதில் 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.



Next Story