கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்
கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்
மேட்டுப்பாளையம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஓரநல்லி பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி, துடியலூர் பன்னிமடையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுமுறை நாட்களில் அந்த மாணவி காரமடை அருகே புங்கம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று அந்த மாணவி புங்கம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
அங்கிருந்த வாலிபர், கல்லூரி மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இது பற்றி வெளியே சென்னால் கல்லூரி மாணவி மற்றும் அவருடைய குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் பயந்து போன கல்லூரி மாணவி, இது பற்றி யாரிடமும் கூறாமல் இருந்து உள்ளார்.
இந்த நிலையில் கல்லூரி மாணவி தனது வீட்டிற்கு சென்றார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இது பற்றி அவர், தனது தாயாரிடம் கூறினார். உடனே அவர், அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் விசாரித்த போது, கல்லூரி மாணவி நடந்த சம்பவம் பற்றி கூறினார். இது குறித்து அந்த மாணவி, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.