கல்லூரி மாணவி திடீர் மாயம்


கல்லூரி மாணவி திடீர் மாயம்
x

திண்டிவனத்தில் கல்லூரி மாணவி திடீர் மாயம் போலீசார் விசாரணை

விழுப்புரம்

திண்டிவனம்,

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த சாம்பசிவம் மகள் சரஸ்வதி(வயது 19). சென்னை தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

அதன்படிகடந்த 11-ந் தேதி சென்னையில் இருந்து பஸ்சில் புறப்பட்டு திண்டிவனத்துக்கு வந்த சரஸ்வதி அங்கு தனக்கு தெரிந்த நபரை பார்த்து விட்டு பஸ்சில் புதுச்சேரிக்கு புறப்பட்டார். ஆனால் வெகுநேரமாகியும் மாணவி வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் சரஸ்வதியை காணவில்லை. இதுகுறித்து அவரது தாய் சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.


Next Story