கல்லூரி மாணவி திடீர் மாயம்


கல்லூரி மாணவி திடீர் மாயம்
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே கல்லூரி மாணவி திடீர் மாயம்

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் அடுத்த திம்மாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபால் மகள் பிரியங்கா(வயது 18). திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து இளங்கலை முதலாம் ஆண்டு உயர் வேதியியல் படித்து வருகிறார்.

இந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த பிரியாங்கா சம்பவத்தன்று சின்னசேலம் பஸ் நிலையத்தில் இருந்து பெரம்பலூர் செல்லும் பஸ்ஸில் ஏறி கல்லூரிக்கு சென்றார். பின்னர் தனது அண்ணன் பிரகாசுக்கு போன் செய்து கல்லூரிக்கு வந்து சேர்ந்துவிட்டதாகவும் கூறினார். ஆனால் காலை 10 மணிக்கு பிரியங்கா கல்லூரிக்கு வரவில்லை என கல்லூரி நிர்வாகம் அவரது தாய் அருள்மணிக்கு போன் மூலம் தெரிவித்தது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது உறவினர்களுடன் பல்வேறு இடங்களில் தேடியும் பிரியாங்காவை காணாததால் இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story