திருவாரூர்: கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து முற்றுகை போராட்டம்


திருத்துறைப்பூண்டி அருகே அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி வகுப்பு புறக்கணித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தண்டலச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாணவ மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டு கல்லூரி வாசலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கழிவறை வசதி, விளையாட்டு மைதானங்கள், கஜா புயலின் பாதிக்கப்பட்ட போது உண்டான சேதங்களை சரி செய்ய வேண்டும், பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும், குடிநீர் வசதி செய்து தர வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதனால் அங்கு ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story