நண்பர்கள் இடையே மோதல்; 3 பேர் படுகாயம்


நண்பர்கள் இடையே மோதல்; 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நண்பர்கள் இடையே மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வெள்ளக்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (வயது25), ராமன் (23), லட்சுமணன் (20), சுபாஷ் (25), டேவிட் (24). இவர்கள் 5 பேரும் நண்பர்கள். இந்த நிலையில் 5 பேரும் அதே பகுதியில் உள்ள ஒரு இடத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் சுபாஷ், டேவிட் ஆகிய 2 பேரும் சேர்ந்து மணிகண்டன், ராமன், லட்சுமணன் ஆகிய 3 பேரையும் கத்தியால் குத்தியதில், 3 பேரும் படுகாயம் அடைந்து, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கூத்தாநல்லூர் போலீசில் மணிகண்டன் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுபாஷ் மற்றும் டேவிட்டை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story