மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி
ரத்தினகிரி அருகே 2 மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
ரத்தினகிரி அருகே 2 மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மோட்டார்சைக்கிள்கள் மோதல்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகாவில் உள்ள ராமநாதபுரம் மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன் (வயது 55), குடிநீர் பம்ப் ஆபரேட்டராக வேலைபார்த்து வந்தார். இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வேலூரில் இருந்து சென்னை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது ரத்தனகிரி அடுத்த சோலையபுரம் அருகே சென்றபோது பின்னால் வேலூர் மாவட்டம் லத்தேரி முத்தியால்பேட்டை ரங்கன் கேட் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (32) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பாண்டுரங்கன் ஓட்டி சென்ற மோட்டார் சாக்கிள் மீது மோதியது.
2 பேர் பலி
இதில் சம்பவ படுகாயமடைந்த இருவரும் இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த ரத்தினகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.