மோட்டார் சைக்கிள்கள் மோதல்; குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம்
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம், நவல்பட்டு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 39). இவர் தனது மனைவி கோகிலா (31), மகன் பிரணவ் (4), மகள் தேஜாஸ்ரீ (2) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் விராலிமலையில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தார். அப்போது கீரனூர்-விராலிமலை சாலையில் பேராம்பூர் பெரியகுளத்தின் அருகே அவர்கள் சென்றபோது எதிரே கல்லுப்பட்டி மகாமுனி மகன் பாலு என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், சங்கர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சங்கர், அவரது மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.