மோட்டார் சைக்கிள்கள் மோதல்; போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்
x

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்தார்.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட்:

திருச்சி மாவட்டம், வாத்தலை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அம்மையப்பன்(வயது 50). இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்த பின்னர் சிறுகாம்பூரில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, தனது ேமாட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் மீது எதிரே மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அம்மையப்பன் படுகாயமடைந்து மயங்கினார். இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய்கோல்டன்சிங் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அம்மையப்பனை மீட்டு போலீஸ் வாகனத்தில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story