மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கல்லூரி மாணவன் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கல்லூரி மாணவன் பலி
x

அருப்புக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் பலியானார். வாலிபர் காயம் அடைந்தார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் பலியானார். வாலிபர் காயம் அடைந்தார்.

மோட்டார்சைக்கிள்கள் மோதல்

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி வேல்முருகன் காலனியை சேர்ந்த மரிய செல்வகுமார் மகன் ஜான் கிருபாகரன் (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நண்பர் முத்தமிழ் ராஜாவுடன் (19) மோட்டார் சைக்கிளில் அருப்புக்கோட்டைக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை முத்தமிழ் ராஜா ஓட்டி வந்துள்ளார். ஜான் கிருபாகரன் பின்னால் உட்கார்ந்து பயணம் செய்துள்ளார்.

இந்தநிலையில் ெரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

மாணவர் பலி

இந்த விபத்தில் ஜான் கிருபாகரன் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானார். முத்தமிழ் ராஜா சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த ஜான் கிருபாகரனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மரியசெல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story