மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கட்டிட தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கட்டிட தொழிலாளி பலி
x

ஆனைமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பலியானார்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

கேரள மாநிலம் நெல்லித்துறையை சேர்ந்தவர்கள் பொன்னன் (வயது 47), கலாதரன் (48). கட்டிட தொழிலாளிகள். இவர்கள் 2 பேரும் ஆனைமலை அருகே உள்ள கோவிந்தாபுரம் பகுதிக்கு கட்டிட வேலைக்கு வந்தனர். பின்னர் வேலை முடிந்து நெல்லித்துறைக்கு சென்று கொண்டிருந்தனர். கல்லூங்குத்து பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது.

இதில் அந்த மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த அருண் (19), பொன்னன், கலாதரன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதில் பொன்னன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அருண்குமார் மீது ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story