மோட்டார் சைக்கிள்கள் மோதல்; டிரைவர் சாவு


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; டிரைவர் சாவு
x
தினத்தந்தி 4 Feb 2023 12:47 AM IST (Updated: 4 Feb 2023 12:43 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் டிரைவர் உயிரிழந்தார்.

அரியலூர்

மீன்சுருட்டி:

டிரைவர்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலு(வயது 58). வேன் டிரைவர். இவர் கடந்த 30-ந் தேதி இரவு சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

அப்போது அவரது மோட்டார் சைக்கிள் மீது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பாலு பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சாவு

பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து, பாலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள திம்மூர் வடக்கு தெருவை சேர்ந்த வேம்பு அரசன் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story