மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கொத்தனார் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கொத்தனார் பலி
x

குத்தாலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கொத்தனார் உயிரிழந்தார்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கொத்தனார் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை மேலக்கடை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்(வயது45). கொத்தனாரான இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் திருவாவடுதுறை காளியம்மன் கோவில் அருகே சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் , செந்தில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செந்திலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரிதாப சாவு

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு செந்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செந்தில் மனைவி மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.


Next Story