மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மெக்கானிக் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மெக்கானிக் பலி
x
தினத்தந்தி 1 April 2023 12:15 AM IST (Updated: 1 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் மோட்டார் சைக்கிள்கள் மோதலில் மெக்கானிக் பலியானார்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடி அருகே உள்ள அக்கிரமேசி கிராமத்தைச் சேர்ந்தவர் தினகரன் (வயது 52) இவர் கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் மெக்கானிக் கடை வைத்திருந்தார். சம்பவத்தன்று இவர் ஐ.டி.ஐ. எதிரில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக எதிரே சந்தக்கடை தெருவை சேர்ந்த சஞ்சய் (23) வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தினகரன் படுகாயம் அடைந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தினகரன் மனைவி விஜய ராதா (40) கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீசார் சஞ்சய் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story