மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி
x

சோளிங்கர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் ஒருவர் பலியானார்.

ராணிப்பேட்டை

சோளிங்கரை அடுத்த வன்னியமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 42). இவர் நேற்று முன்தினம் இரவு கூடலூரில் இருந்து வன்னிய மோட்டோருக்கு மோட்டார்சைக்கிளில் சென்றபோது ஐபேடு கிராமத்தை சேர்ந்த குமரேசன் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிளும், கிருஷ்ணன் மோட்டார் சைக்கிளும்மோதிக்கொண்டன.

இதுல் கிருஷ்ணன் கிழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர் பரிசோதித்து பார்த்து கிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கொண்ட பாளையம் போலீஸ் நிலையத்தில் கிருஷ்ணன் மனைவி கனகா புகார் அளித்ததின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story