மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி
x

மோட்டார் சைக்கிள்கள் மோதலில் விவசாயி பலியானார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த அப்துல்லாபுரம் பஜனை கோவில் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 50) விவசாயி. இவர் கால்நடைகள் வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை ஜம்புகுளம் கூட்டு ரோட்டில் இருந்து கால்நடைகளுக்கு தீவனங்களை வாங்கிக் கொண்டு மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கேசவணங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வளைவில் சென்றபோது எதிரே வேகமாக வந்த மோட்டார்சைக்கிள், முனுசாமி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்த சோளிங்கர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story