மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு
மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் வாலிபர் உயிரிழந்தார்.
பெரம்பலூர்
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா தெரணி கிராமத்தை சேர்ந்தவர் வையாபுரி. இவர் சொந்த வேலையாக தனது மோட்டார் சைக்கிளில் பாடாலூருக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் தெரணிபாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார்(வயது 27) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், வையாபுரியின் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜ்குமார், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story