மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
x

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த நாகலேரி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் சஞ்சய் (வயது 23). கட்டிடங்களுக்கான கம்பிகட்டும் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் கலவைக்கு சென்று கொண்டிருந்தார். அதே நேரத்தில் சொரையூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஆற்காட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார்.

அல்லாளச்சேரி அருகே சென்றபோது இரண்டு மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதில் சஞ்சய்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அருகே இருந்தவர்கள் மீட்டு கலவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மூர்த்தி வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story