மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் தந்தை இறந்த 30-வது நாளில் மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் தந்தை இறந்த 30-வது நாளில் மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார்.

30-வது நாள் நிகழ்ச்சி

மயிலாடுதுறை அருகே நீடூர் சன்னதி தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் முருகவேல் (வயது 28). இவரது தந்தை பன்னீர் செல்வம் கடந்த 30 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். பன்னீர்செல்வத்தின் 30-வது நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த உறவினர்கள், மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் காத்திருந்துள்ளனர். இதை தொடர்ந்து முருகவேல் உறவினர்களை அழைத்து வர வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

மயிலாடுதுறை திருவிழந்தூர் பகுதியில் சென்ற போது எதிரே 3 பேர் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், முருகவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட முருகவேல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், முருகவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

3 பேர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் வந்த சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன்கோவில் தொழுதூர் தோப்புத்தெருவை சேர்ந்த ராஜ்குமார் மகன் ஹரிகிருஷ்ணன் (23), வைத்தீஸ்வரன்கோவில் தெற்கு வீதியைச் சேர்ந்த செந்தில் மகன் குணால் (21), மயிலாடுதுறை செங்கமேட்டுத்தெருவை சேர்ந்த சத்தியநாராயணன் மகன் சாய்கிருஷ்ணா (21) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தந்தை இறந்த 30-வது நாளில் அவரது மகன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்ைத ஏற்படுத்தி உள்ளது.


Next Story