மோட்டார் சைக்கிள்கள் மோதல்; காய்கறி வியாபாரி பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; காய்கறி வியாபாரி பலி
x

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் காய்கறி வியாபாரி உயிரிழந்தார்.

அரியலூர்

மீன்சுருட்டி:

காய்கறி வியாபாரி

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சின்னவளையம் அருகே உள்ள மணக்கரை கிராமத்தை சேர்ந்த குப்புசாமியின் மகன் சுரேஷ்(வயது 40). காய்கறி வியாபாரியான இவர் வியாபாரத்தை முடித்து விட்டு, வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் குருவாலப்பர் கோவிலில் இருந்து சின்னவளையம் நோக்கி சென்றபோது, இடைக்கட்டு பிரிவு சாலையில் லாரியை முந்தி செல்ல முயன்றார்.

சாவு

அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், சுரேசின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story