மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு
x

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

திங்கள்சந்தை அருகே உள்ள பெருங்கோடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 75), கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று டீ குடிப்பதற்காக செட்டியார்மடம் சந்திப்பில் சாலையை கடக்க முயன்றார். அப்போது திங்கள்சந்தையில் இருந்து கல்லுகூட்டம் நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அய்யப்பன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அய்யப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அய்யப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story