பெண் குழந்தைகள் பாதுகாப்பு கருதி அனைத்து பள்ளிகளிலும் வண்ண சிறகுகள் திட்டம்-கலெக்டர் தகவல்


பெண் குழந்தைகள் பாதுகாப்பு கருதி அனைத்து பள்ளிகளிலும் வண்ண சிறகுகள் திட்டம்-கலெக்டர் தகவல்
x

பெண் குழந்தைகள் பாதுகாப்பு நலனை உறுதிசெய்யும் வகையில், "வண்ண சிறகுகள்" திட்டம், அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் கூறினார்.

சிவகங்கை

பெண் குழந்தைகள் பாதுகாப்பு நலனை உறுதிசெய்யும் வகையில், "வண்ண சிறகுகள்" திட்டம், அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் கூறினார்.

வண்ண சிறகுகள்

சிவகங்கை மருது பாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் கல்வித்துறை மூலம் "வண்ண சிறகுகள்" திட்ட தொடக்க விழா மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து வரவேற்று பேசினார்.

விழாவில் கலெக்டர் பேசியதாவது:-

பெண் குழந்தைகள் பாதுகாப்பு நலனை உறுதிசெய்யும் வகையில், "வண்ண சிறகுகள்" என்ற திட்டம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக செயல்படுத்திட, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் கல்வித்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பெண் ஆசிரியா் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு திறன் வளா்ப்பு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே "வண்ண சிறகுகள்" திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பெண் குழந்தைகளை மனதளவில் வலிமைப்படுத்த வேண்டும், குழந்தைகளுக்கு சட்டங்கள் குறித்தும், பிரச்சினைகள் குறித்தும் பள்ளிகளில் ஆசிரியா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்திட வேண்டும்.

சிறப்பாக செயல்படுத்திட...

ஆசிரியா்கள் அன்பாக பழகி குழந்தைகளின் மனநிலை குறித்து அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பள்ளியில் குழந்தைகள் மன்றம் மூலம் விளையாட்டு போட்டிகள் நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்திட வேண்டும். இந்த திறன் வளர்ப்பு பயிற்சியில் பங்குபெற்றுள்ள அனைத்து ஆசிரியர்களும், இதன் வாயிலாக தெரிவிக்கப்படும் கருத்துகளை உள்வாங்கி, தங்களது பங்களிப்பினை சிறந்த முறையில் ஏற்படுத்தி "வண்ண சிறகுகள்" திட்டத்தினை அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக செயல்படுத்திட உறுதுணையாக இருந்திட வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் .துரைமுருகன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) விஜய் சந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) உதயகுமார், மாவட்ட கல்வி அலுவலா், (தனியார் பள்ளிகள்) பொன் விஜய சரவணகுமார், முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நேருயுவகேந்திரா .ஜவகா், குழந்தைகள் நலக்குழு தலைவா் சாந்தி, மற்றும் பள்ளி ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story