வண்ணமயமாகும் சாலை மையத்தடுப்புகள்
திருப்பூர்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாலைகள் பசுமை சாலைகளாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சாலை ஓரங்களில் இருபுறமும் 3 அடுக்குகளாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் சாலை மையத்தடுப்புகளில் பல வண்ணங்களில் பூச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
மடத்துக்குளம் பகுதியில் தற்போது லேசான சாரல் மழையுடன் குளிர்ந்த வானிலை நிலவுகிறது. இதனால் சிகப்பு, வெள்ளை, ஆரஞ்சு, மஞ்சள் என பல வண்ணங்களில் பூக்கள் பூத்து பளிச்சிடத் தொடங்கி கண்களுக்கு விருந்தளிப்பதாக உள்ளது.
இந்த சாலைகள் விரைவில் பசுமைச்சாலைகளாக மட்டுமல்லாமல் வண்ணமயமான சாலைகளாகவும் காட்சியளிக்கும் வாய்ப்பு உள்ளது.
Next Story