இன்று மதியம் சென்னை வருகிறது: ஒடிசாவில் இருந்து மேலும் ஒரு சிறப்பு ரெயில்
இன்று மதியம் சென்னை வருகிறது: ஒடிசாவில் இருந்து மேலும் ஒரு சிறப்பு ரெயில்.
சென்னை,
ஒடிசா ரெயில் விபத்தில் உயிர் தப்பிய 137 தமிழக பயணிகள் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் சிறப்பு ரெயில் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களில் சிறிய காயம் அடைந்தவர்கள் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு பஸ்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த நிலையில், ஒடிசாவில் மீதமுள்ள பயணிகள் அந்த மாநிலத்தின் பத்ரக்கில் இருந்து நேற்று மதியம் 1 மணி அளவில் சிறப்பு ரெயில் மூலம் சென்னை புறப்பட்டனர். இவர்கள் இன்று மதியம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்தடைவார்கள். இந்த சிறப்பு ரெயில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் நிறுத்தப்படும். எனவே, ரெயில் விபத்தில் சிக்கித்தவிக்கும் பயணிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் இந்த ரெயில் சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.