ஊழியர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்


ஊழியர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
x

தூய்மைப் பணியாளர் மேம்பாட்டு திட்டம் மூலம் ஊழியர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

ராணிப்பேட்டை

தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் சேகரிப்பு தொட்டி, பொது, சமுதாய, நிறுவன கழிப்பறைகள், மழைநீர் வடிகால், கழிவுநீர் மலக்கசடு சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு பணி மற்றும் கழிவுநீர் குழாய் பராமரிப்பு பணியில் ஈடுபடுபவர்களின் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

இதனை நகரமன்றத் தலைவர் சுஜாதாவினோத் நேற்று குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் விநாயகம், தூய்மைப் பணியாளர்களின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழக அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைத்தார். இதில், நகராட்சி பொறியாளர், நகராட்சி மேலாளர், துப்புரவு ஆய்வாளர், தூய்மைப் பணியாளர்கள் மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்கள் எஸ்.பி.எம். மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story