மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா தொடக்கம்


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா தொடக்கம்
x

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் நேற்று காலை அகண்ட தீபத்தை ஏற்றி வைத்து நவராத்திரி விழாவினை தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு

விழாவையொட்டி, சித்தர் பீடத்தின் வளாகம் முழுவதும் கலை நயத்துடன் பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை 2 மணி அளவில் மங்கல இசையுடன் தொடங்கிய நவராத்திரி விழாவில் கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

அக்டோபர் 5-தேதி வரை ஆதிபராசக்தி அம்மனுக்கு தினந்தோறும் பல்வேறு காப்பு மற்றும் அலங்காரத்துடன் நவராத்திரி விழா நடைபெறும். விழா ஏற்பாட்டினை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் தலைமையில் அனைத்து மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தினர் பொறுப்பேற்று செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் உமாதேவி ஜெய் கணேஷ், ஆஷா அன்பழகன், ஸ்ரீலேகா செந்தில்குமார், வழக்கறிஞர் அகத்தியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story