சத்தியமங்கலம் வனப்பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்


x

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கோசத்தியமங்கலம், தாளவாடி, கடம்பூர், கேர்ளமாளம், பவானிசாகர், டி.என்.பாளையம், கெட்டவாடி உட்பட 10 வனச்சரகங்கள் உள்ளன.

இந்த சரகங்களில் இன்று முதல் வரும் 2-ம் தேதி வரை 6 நாட்களுக்கு வன விலங்குகள்கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது. இதில் முதல் மூன்று நாட்கள் நேர்கோட்டுப் பாதையில் உள்ளது.

இரண்டாவது மூன்று நாட்கள் மாமிச உண்ணிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெறும். கணக்கெடுப்பு முடிவுகள் சென்னை உயர் வன அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் அவர்கள் முடிவை அறிவிப்பார்கள்.

இந்த பணியினை சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட உதவி வன அலுவலர் யோகேஷ் தலைமையில் வனவர் தீபக்குமார் உயிரியலாளர் சக்திவேல், மற்றும் வனத்துறையை சேர்ந்த துப்பாக்கி ஏந்தி 6 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story