கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தொடக்க விழா நிகழ்ச்சி


கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தொடக்க விழா நிகழ்ச்சி
x

கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தொடக்க விழா நிகழ்ச்சி கலையரங்கத்தில் நடைபெற்றது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சின்ன கொள்ளம்பாக்கத்தில் உள்ள கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தொடக்க விழா நிகழ்ச்சி ரகுபதி சரோஜா கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கல்லூரி இயக்குனர் டாக்டர் மீனாட்சி அண்ணாமலை தலைமை உரையாற்றினார். கல்லூரியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அண்ணாமலை ரகுபதி முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் காசிநாத பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் டீன் டாக்டர் சுப்பாராஜ் அனைத்து துறை தலைவர்களையும் அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார். இதில் முதலாம் ஆண்டு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் துறை தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் முதலாம் ஆண்டு துறை தலைவர் டாக்டர் சரவணன் நன்றி உரையாற்றினார்.


Next Story