கழிப்பறையின் அடிப்படை வசதிகள் குறித்து கருத்து தெரிவிக்கலாம்


கழிப்பறையின் அடிப்படை வசதிகள் குறித்து கருத்து தெரிவிக்கலாம்
x

கழிப்பறையின் அடிப்படை வசதிகள் குறித்து கருத்து தெரிவிக்கலாம்.

திருச்சி

திருச்சி மாநகராட்சியில் உள்ள கழிப்பறையில் சரிவர பராமரிப்பு இல்லாமல் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து நேற்று முதல் மாநகராட்சி சார்பில் மாநகரம் முழுவதும் உள்ள கழிப்பறையின் அடிப்படை வசதிகள் குறித்து தங்களது குறைபாடுகளை எளிய முறையில் தெரியப்படுத்தும் விதமாக கழிப்பறையில் வெளியே உள்ள சுவற்றில் கருத்துக்கேட்பு படிவம் ஒட்டப்பட்டுள்ளது. இதில் அந்த படிவத்தில் விரைவுத் தகவல் குறியீடு (கியூ ஆர் கோடு) இடம் பெற்றுள்ளது. இதனை பொதுமக்கள் தங்களது செல்போன் மூலம் ஸ்கேன் செய்து, அந்த கழிப்பறை குறித்த கருத்துக்களை திருச்சி மாநகராட்சி இணையதள பக்கத்தில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

அந்த படிவத்தில் கழிப்பறை சுத்தமாகவும், பயன்படுத்தும் நிலையிலும் உள்ளதா?, கை கழுவும் இடம் சுத்தமாக உள்ளதா?, தண்ணீர் வசதி உள்ளதா?, போதுமான காற்றோட்ட வசதி உள்ளதா?, கழிப்பறையின் உள்ளேயும், வெளியேயும் போதுமான வெளிச்சம் உள்ளதா?, கழிப்பறை கதவுகளில் தாழ்ப்பாள் சரியான முறையில் பொருத்தப்பட்டுள்ளதா? கழிப்பறையில் துர்நாற்றம் வீசுகிறதா? என்ற 7 கேள்விகளுக்கு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். திருச்சி மாநகரில் சத்திரம் பஸ் நிலையம், காந்தி மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கழிப்பறைகளில் இந்த கருத்து கேட்பு படிவம் ஒட்டப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் ஆவலுடன் செல்போன் மூலம் ஸ்கேன் செய்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Next Story