பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து கருத்து


பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து கருத்து
x

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர்

தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்பை ரொக்கமாக பெண்களின் கையில் கிடைக்குமாறு செய்தால், தங்கள் குடும்பத்திற்கு தேவையான தரமான பொருட்களை தாங்களே வாங்கிக் கொள்வார்கள். அவ்வாறு அவர்கள் பொருட்களை வாங்கினால், ஒவ்வொரு உள்ளூர் வியாபாரிகளும் பயன்பெறுவார்கள். மேலும் தரைக்கடை வியாபாரிகள் மற்றும் கரும்பு விவசாயிகளும் பயனடைவார்கள்.கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் இருந்த பொருட்களில் தரம் இல்லை. அளவும் சரியானதாக இல்லை. பொதுமக்களிடத்தில் முறையாக சென்றடையவும் இல்லை. சிலருக்கு கரும்பு கிடைத்தது. சிலருக்கு கிடைக்கவில்லை. அளவுகளில் மாற்றம் இருந்தது. இவற்றை தவிர்ப்பதற்காக வருகிற பொங்கலுக்கு பணமாக வழங்கினால் நன்றாக இருக்கும். பணத்தை ரொக்கமாகவும் மக்களின் கைகளில் கிடைப்பது போன்றும் நேரடியாக வழங்க வேண்டும். குறிப்பாக முதியவர்கள் அந்த பணத்தின் மூலம் தேவையானவற்றை வாங்கிக் கொள்வார்கள் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Next Story