அரசு கல்லூாியில் வணிகவியல் துறை பேரவை தொடக்கம்


அரசு கல்லூாியில் வணிகவியல் துறை பேரவை  தொடக்கம்
x

வணிகவியல் துறை பேரவை ெதாடக்க விழா நடைபெற்றது.

கரூர்

மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை (கணினி பயன்பாட்டியல்) பேரவைத் ெதாடக்க விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் துணைக்குழு உறுப்பினர் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை தாங்கினார். தாளாளர் கோதை நடேசன், செயலாளர் என்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதுகலை பி.காம் சி.ஏ 2-ம் ஆண்டு மாணவி ஹரிஷாஸ்ரீ வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியின் பொருளியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி துறையின் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் லோகநாதன் கலந்து கொண்டு இந்திய பொருளாதாரத்தில் மின் வணிகத்தின் பங்கு பற்றி தன்னுடைய அனுபவங்களை மாணவிகளுக்கு எடுத்துரைத்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். முடிவில் இளநிலை 2-ஆம் ஆண்டு மாணவி தர்ஷினி நன்றி கூறினார். இதில் துணை முதல்வர், கல்லூரி உள் தர கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளர், பிற துறையை சார்ந்த துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story