ரூ.64½ கோடியில் வணிக வளாகம், குடியிருப்புகள்
கோவை மாவட்டத்தில் ரூ.64½ கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகளை மாவட்ட கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார்.
கோவை
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் கோவை கணபதியில் ரூ.12.71 கோடி மதிப்பில் வணிக வளாகம் மற்றும் அலுவலக கட்டிடம் கட்டும் பணிகள், ரூ.22.37 கோடியில் 1.09 ஏக்கர் பரப்பளவில் 48 வீடுகள் கொண்ட உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி,
ரூ.26.25 கோடி மதிப்பீட்டில் 0.90 ஏக்கர் பரப்பளவில் 56 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி, ரூ.3.27 கோடி மதிப்பீட்டில் 0.95 ஏக்கர் பரப்பளவில் நகர் ஊரமைப்பு துறையின் சார்நிலை அலுவலக கட்டடம் கட்டும் பணிகள் உள்பட மொத்தம் ரூ.64½ கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சமீரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அப்போது செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் ஆர்.எட்வின் சுந்தர்சிங், உதவி செயற்பொறியாளர் ஐ.சுமதி மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.