வாணியம்பாடி மாணவிகள் பதக்கம் வென்று சாதனை
மாநில ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் வாணியம்பாடி மாணவிகள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
திருப்பத்தூர்
கோவையில் 11-வது தமிழ்நாடு மாநில ரோல்பால் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், வேலூர் என 15 மாவட்டங்களில் இருந்து மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். பெண்கள் பிரிவில் திருப்பத்தூர் வாணியம்பாடி இஸ்லாமியா மகளிர் கல்லூரி மாணவிகள் 3-வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகள் லக்கி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமியின் பயிற்சியாளர் எம்.பிரபு தலைமையில் சென்று வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமாரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.
Related Tags :
Next Story