சாலையோர வியாபாரிகளுக்கு வணிக கியாஸ் சிலிண்டர்


சாலையோர வியாபாரிகளுக்கு வணிக கியாஸ் சிலிண்டர்
x

சாலையோர வியாபாரிகளுக்கு வணிக கியாஸ் சிலிண்டர் வினியோகிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் கூட்டுறவுத் துறையின் சார்பில் சாலையோர வியாபாரிகள் மற்றும் ஏழை, எளிய, நடுத்தர பெண் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 5 கிலோ எடையிலான வணிக கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் விழா துறைமங்கலம் ரேஷன் கடையில் நடந்தது. இந்த கியாஸ் சிலிண்டரை முதன் முறை பெறும்போது ரூ.1,520 செலுத்தி வியாபாரிகள் பெற்றுக்கொள்ள வேண்டும். பிறகு அந்த சிலிண்டரில் மீண்டும் கியாஸ் நிரப்புதற்கு ரூ.576 செலுத்தினால் போதும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 197 முழுநேரக்கடைகளிலும், குடும்ப அட்டைதாரர்கள் அதிகம் உள்ள 3 பகுதிநேர கடைகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன் அடிப்படையில், பெரம்பலூர் தாலுகாவில் 48 ரேஷன்கடைகள், ஆலத்தூர் தாலுகாவில் 43 ரேஷன் கடைகள், குன்னம் தாலுகாவில் 50 கடைகள், வேப்பந்தட்டை தாலுகாவில் 59 ரேஷன் கடைகள் என மொத்தம் 200 ரேஷன்கடைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


Next Story