வணிகர் சங்கத்தினர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு


வணிகர் சங்கத்தினர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு
x

சாலையோர கடைகளை இடம்மாற்றக்கோரி வணிகர் சங்கத்தினர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு

திருப்பூர்

அவினாசி

சாலையோர கடைகளை இடம்மாற்றக்கோரி வணிகர் சங்கத்தினர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி புதிய பஸ் நிலையம் முதல் சேவூர் ரோடு செங்காடு திடல் வரை ஜவுளி கடைநகை கடை, மளிகை கடை, பேன்சி, டிபார்ட்மெண்டல் ஸ்டோர், இரும்பு கடை, மின்சாதன பொருட்கள் கடை. பழமுதிர்நிலையம், பேக்கரிகள், என பல்வேறு கடைகள் உள்ளது. இந்த கடைகளின் முன்பு ரோட்டோர கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதனால் வாடகை, தொழில் வரி, வருமானவரி உள்ளிட்ட வரியினங்கள் செலுத்தி கடை நடத்தி வருபவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாவதாகவும், வருமான இழப்பு ஏற்படுவதால்ரோட்டோர கடைகளுக்கு தனி இடம் ஒதுக்குமாறு வலியுறுத்த அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக அவினாசி புதிய பஸ்நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில் அவினாசி புது பஸ் நிலையம் முதல் செங்காடு வரை அனைத்து பகுதிகளிலும் ரோட்டோர கடைகள் ஏராளமாக உள்ளதுஇதனால் எங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வண்டி வாகனங்கள் நிறுத்த இடமில்லை மேலும் அவர்கள் வருவதற்கு மிகவும் இடையூறு ஏற்படுகிறது. இதனால் எங்களது வணிகம் பெருமளவு பாதிக்கப்படுகிறது. மேலும் இடநெருக்கடியால் அடிக்கடி சாலை விபத்து நேரிடுகிறது. எனவே ரோட்டோர கடைகளுக்கு தனி இடம் ஒதுக்கி எங்களது வியாபாரம் நடக்க ஆவன செய்ய வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடமும் நேரில் தெரிவித்ததும் கோரிக்கை மனு கொடுத்தும் வந்து பலனுமில்லை. எனவே இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இதே நிலை நீடித்தால் திருப்பூர் மாவட்ட வியாபாரிகள் சார்பாக கடைப்பு போராட்டம், மற்றும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. என்று தெரிவித்தனர்.


Reporter : S. Thirungnanasampandam Location : Tirupur - Avinashi


Next Story