குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் பெண்கள் உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் ஆய்வு


குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில்  பெண்கள் உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் ஆய்வு
x

குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் தேசிய பெண்கள் உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

அரசு பள்ளி, குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் தேசிய பெண்கள் உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பெரும்பாக்கம் சாலையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் தேசிய பெண்கள் உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் பால்கிஷன்கோயல் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா, அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகின்றதா என்பது குறித்து அவர் ஆய்வு செய்தார்.

மேலும் அவர் கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆய்வகம், வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டார். பள்ளி தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று ஆசிரியர், மாணவர் வருகை பதிவேட்டையும் பார்வையிட்ட அவர் மாணவர்களுக்கு முதலுதவி வழங்கும் மருத்துவ பெட்டியை ஆய்வு மேற்கொண்ட பொழுது அதிலிருந்த மருந்துகள் அனைத்தும் காலாவதியாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவற்றை பறிமுதல் செய்தார்.

பள்ளி வளாகத்தினை தூய்மையாக பாதுகாக்கவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என அவர் அறிவுிரை வழங்கினார்.

அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, தாசில்தார் சரளா, உள்பட அரசு அலுவலர்கள் இருந்தனர்.


Next Story