அனுபவ மையத்தில் ஆணையாளர் ஆய்வு


அனுபவ மையத்தில் ஆணையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 30 Aug 2023 12:45 AM IST (Updated: 30 Aug 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

அனுபவ மையத்தில் ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாநகர பகுதியில் உள்ள குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைத்து அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உக்கடம் பெரியகுளக்கரையில் ரூ.2½ கோடியில் அனுபவ மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கோவை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செய்யப்பட்டு உள்ள பணிகள், கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் அனைத்தும் 3 டி வடிவத்தில் திரையிட்டு காட்டப்படும்.

இதுதவிர இங்கு குழந்தைகளை கவர 3டி விளையாட்டு அம்சங்களும் உள்ளன. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மையத்துக்கு மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்றார். பின்னர் அங்கு நடந்து வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், அந்த பணிகள் அனைத்தையும் விரைவில் முடிக்க உத்தரவிட்டார்.

இது குறித்து ஆணையாளர் மு.பிரதாப் கூறும்போது, ஏற்கனவே இந்த குளக்கரையில் பொதுமக்களை கவர்ந்து இழுக்க பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த அனுபவ மையம் பொதுமக்களுக்கு மேலும் ஒரு சிறப்பு அம்சமாக இருக்கும். இதற்கான பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படும் என்றார்.

1 More update

Next Story