மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் ஆணையாளர் கிறிஸ்துராஜ் உத்தரவு


மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும்  சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்  ஆணையாளர் கிறிஸ்துராஜ் உத்தரவு
x

மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற ஆணையாளர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.

சேலம்

சேலம்,

சேலம் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை, வடிகால், ஓடை தூர்வாருதல், பாலம் அமைத்தல், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அம்மாப்பேட்டை பகுதியில் ரூ.9 கோடியே 20 லட்சத்தில் சாலைகளின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து ரூ.65 லட்சத்தில் அம்பாயிரம்சாவடி தெருவில் அமைக்கப்பட்டு வரும் சாலை அமைக்கும் பணி, அதே போன்று 2-வது அக்ரகாரம், 3-வது அக்ரகாரத்தில் அலங்கார தரை கற்கள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து கற்கள் தரத்தை பரிசோதனை செய்தார். தொடர்ந்து பழைய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணி, திருமணிமுத்தாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது எதிர்வரும் மழை காலத்தை கருத்தில் கொண்டு பாலப்பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று அலுவலர்களிடம் கூறினார்.

ஆய்வின்போது மாநகர பொறியாளர் ரவி, உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், புவனேஷ்வரி, சுமதி, உதவி பொறியாளர் சீனிவாச மூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story