மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் கமிஷனர் திடீர் ஆய்வு


மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் கமிஷனர் திடீர் ஆய்வு
x

மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் கமிஷனர் திடீர் ஆய்வு நடத்தினர்.

திருச்சி

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையை நேற்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தானியங்கி கருவி மூலம் போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பது குறித்தும், அவ்வாறு அபராதம் விதிக்கும்போது, பெரும்பாலான வாகன ஓட்டிகளின் வாகன பதிவு எண், அவர்களுடைய செல்போன் எண்ணுடன் இணைக்கப்படாமல் இருப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார். மேலும், மாநகரில் வேகக்கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக வாகனங்கள் செல்லும் வழித்தடத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது குறித்தும் அறிவுறுத்தினார். தொடர்ந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை பார்வையிட்ட கமிஷனர், போலீசாருக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.

1 More update

Next Story