குழந்தைகள் பிச்சை எடுப்பதை தடுக்க 51 கோவில்களில் அதிகாரிகள் குழு கண்காணிப்பு


குழந்தைகள் பிச்சை எடுப்பதை தடுக்க 51 கோவில்களில் அதிகாரிகள் குழு கண்காணிப்பு
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் பிச்சை எடுப்பதை தடுக்க 51 கோவில்களில் அதிகாரிகள் குழு கண்காணிக்கப்படும் என்று தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் கூறினார்.

சிவகங்கை


குழந்தைகள் பிச்சை எடுப்பதை தடுக்க 51 கோவில்களில் அதிகாரிகள் குழு கண்காணிக்கப்படும் என்று தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் கூறினார்.

குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் சிவகங்கை மாவட்டத்திற்கு நேற்று வந்தார். அவர் சிவகங்கையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திலுள்ள குழந்தைகள் நேய வளாகத்தின் செயல்பாடுகள் குறித்து, நேரில் பார்வையிட்டார்.. அவருடன் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் உடன் சென்றனர்.

மகளிர் போலீஸ் நிலையத்தில் உள்ள குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் வைக்கும் அறை மற்றும் படிப்பதற்கு புத்தகங்கள் வைக்கும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

பாராட்டு

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் வாயிலாக 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு, நலன் மற்றும் உரிமைகள் முறையாக பேணிக்காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவைகள் தொடர்பாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாக களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் இந்த மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் யாரும் இல்லை என்ற நிலை உள்ளது பாராட்டுக்குரியதாகும். கூர்நோக்கு இல்லங்களில் உள்ள சிறார்களுக்கு கவுன்சிலிங் அளிக்கவும் விளையாட்டு மைதானம் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

51 கோவில்களில் கண்காணிப்பு

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பிச்சை தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை முற்றிலும் பாதுகாத்திடும் பொருட்டு இந்தியா முழுவதும் 51 கோவில்களில் அதிகாரிகளை கொண்டு குழு அமைத்து கண்காணி்ப்பு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 9 கோவில்களில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காளையார்கோவிலும் ஒன்றாகும்.

இங்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கொண்ட குழு அமைத்து, நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கூட்டம் நடைபெற்றது. இதன் அடுத்தகட்டமாக, பஸ் நிலையம், ெரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் மேற்கண்ட நடைமுறைகளை செயல்படுத்திடவும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ராஜ்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், குழந்தை நல குழுத்தலைவர் சாந்தி, குழந்தைகள் நல போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story