கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்


கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
x

திருப்பத்தூரில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எம்.சுந்தரேசன் தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். நகர துணை செயலாளர் ஆர்.வெங்கடேசன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் சாமிக்கண்ணு, ஒன்றிய செயலாளர் அண்ணாமலை, கே.ஆர்.வேணுகோபால் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் காரல் மார்க்ஸ் குறித்து அவதூறாக பேசிய கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

இதில், ஒன்றிய செயலாளர் தீபாபூபதி, குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

1 More update

Next Story