இந்திய கம்யூனிஸ்டு கூட்டம்
மருதூரில் இந்திய கம்யூனிஸ்டு கூட்டம் நடந்தது
நாகப்பட்டினம்
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த மருதூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் நாராயணன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள 36 ஊராட்சி மன்ற பகுதிகளுக்கும் சரிவர கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வராததை கண்டித்தும், 100 நாள் வேலை திட்ட பணிகள் இல்லாமல் வீட்டில் இருக்கும் தொழிலாளிகளுக்கு உடனடியாக 100 நாள் வேலை வழங்க கோரியும் செல்வராஜ் எம்.பி. தலைமையில் இன்று(வெள்ளிக்கிழமை) தகட்டூர் கடைத்தெருவில் சாலைமறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
Related Tags :
Next Story