மறியல் செய்ய முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து மறியல் செய்ய முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, பொது நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், விவசாயிகளின் வருவாய் உயர்த்துவதாக அறிவித்ததை நிறைவேற்றாமை, வெறுப்பு அரசியல் உள்ளிட்டவைகளை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தபால் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் களஞ்சியம் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முருகபூபதி, மாவட்ட துணை செயலாளர் தர்மராஜ், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம், உள்ளாட்சி துறை செயலாளர் சண்முகராஜன், கட்டிட சங்கம் லோகநாதன், பனைத்தொழில் சங்கம் முருகேசன், நாகராஜ், முருகையா, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தபால் அலுவலகத்தின் முன் மறியல் செய்ய முயன்றபோது 7 பெண்கள் உள்பட 32 பேரை கைது செய்தனர்.