இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியலில் ஈடுபட முயற்சி
திருவண்ணாமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியலில் ஈடுபட முயன்றனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திருவண்ணாமலை அறிவொளி பூங்கா எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில நிர்வாக்குழு உறுப்பினர் மாசிலாமணி, மாவட்ட செயலாளர் தங்கராஜ், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் முத்தையன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
அப்போது அவர்கள் மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைக்காததை கண்டித்தும், மின்சார சட்டத் திருத்தத்தை கைவிடக் கோரியும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சென்று பஸ் நிலையம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மறியலில் ஈடுபடாமல் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.