இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
x

குமாரபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள குமாரபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்யாத ஊத்துப்பட்டி பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து நேற்று மாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளைச் செயலாளர் ரங்கநாதன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் பாபு, மாவட்ட குழு உறுப்பினர்கள் பரமராஜ், சேதுராமலிங்கம், ரஞ்சனி கண்ணம்மா, நகரச் செயலாளர் சரோஜா, தாலுகா துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.


Next Story