இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்
திருப்பூர்
அவினாசி
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பால்-தயார் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.வரி, விவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் பிடியில் சிக்கவைக்க முயற்சி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவினாசி தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்திற்கு கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட துணைச்செயலாளர் எம்.மோகன் தலைமை தாங்கினார்.
அவினாசி ஒன்றியக்குழு செயலாளர் ஏ.ஜி.சண்முகம், ஒன்றிய துணைச் செயலாளர்கள் வி.கோபால், இரா.முத்துசாமி, பொருளாளர் ஆர்.ஷாஜகான், ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள், செல்வராஜ், நாசர், கனகராஜ், மாதர் சங்க செயலாளர் பேபி, 120 பெண்கள் உள்பட 245 பேர் மறியலில் கலந்து கொண்டனர். இவர்களை அவினாசி போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story