இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேலூர் மாநகரக்குழு, கணியம்பாடி ஒன்றியக்குழு சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் மாநகர கமிட்டி செயலாளர் (பொறுப்பு) ஜீவா தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மணி, காவேரி, சூர்யா மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஜி.லதா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறைகளை கண்டித்தும், அங்கு நடக்கும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய அம்மாநில பா.ஜ.க. மற்றும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story