இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Sept 2023 12:15 AM IST (Updated: 10 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிவகிரிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான சின்ன ஆவுடைப்பேரி கண்மாய் பகுதியின் அருகே கோம்பை ஆற்றுப்பகுதியில் இருந்து கனிம வளங்களை கடத்தி செல்வதை கண்டித்தும், சிவகிரி பேரூராட்சி பகுதி மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பேரூராட்சி கவுன்சிலர் அருணாசலம், மாவட்ட செயலாளர் இசக்கித்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகிரி நகர துணை செயலாளர் குருவு, ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட செயலாளர் முனியாண்டி, மாதர் சங்க மாவட்ட பொறுப்பாளர் சண்முகவடிவு, இந்திய தேசிய மாதர் சங்க சிவகிரி நகர செயலாளர் லிங்கம்மாள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தென்காசி மாவட்டக்குழு உறுப்பினர் சமுத்திரக்கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story