இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Sept 2022 1:00 AM IST (Updated: 22 Sept 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல்

குமாரபாளையம்:-

குமாரபாளையம் நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தாலுகா அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குமாரபாளையம் கலைமகள் தெரு, இந்திரா நகர், மணிமேகலை தெரு, இந்திரா நகர் மற்றும் அண்ணா நகர் பகுதி பொதுமக்களுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தப்பட்டது. நகர செயலாளர் கணேஷ்குமார் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் அசோகன், பொருளாளர் மனோகரன், துணை செயலாளர் விஜய் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் மணிவேல், வக்கீர் கார்த்திகேயன், நிர்வாகிகள் அர்த்தனாரி, ரவி, பாலன், பூபதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். பின்னர் தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.


Next Story