இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்
ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை பிடித்து அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து அவர் கூறும் போது போக்குவரத்து போலீசார் நடுரோட்டில் நின்று கொண்டு ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை பிடித்து அபராதம் விதிக்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே மத்திய அரசு விதித்து உள்ள அபராதம் வசூலிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story